JUST IN

Advertisement

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.


Advertisement


சிங்கப்பூரில் புதிதாக 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அங்குப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,400 ஐ கடந்துள்ளது. இவர்களில் 90 சதவிகிதம் பேர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடக்கத்தில் நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்த நாடாகப் பார்க்கப்பட்ட சிங்கப்பூரில், தற்போது தொற்று அதிகரித்துள்ளது.

 


Advertisement

image

இதுவரை பத்து பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், புதிதாக 700க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் அதிகம் பேர் புலம் பெயர் தொழிலாளர்கள் என்பதால் அவர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குப் பிரித்துத் தங்க வைக்கும் பணிகளைச் சிங்கப்பூர் அரசு மேற்கொண்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement