பெரம்பலூரில் போதைக்காக அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டிஞ்சர் போன்ற மருந்தை குடித்த இளைஞர்கள் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் நகர் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஸ்(28), திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த ரமேஷ்( 34) மற்றும் திருநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(24) ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்கள் மூவரும் பெரம்பலுர் நகரை ஒட்டியுள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரை பகுதியில் SURGICAL SPIRIT எனும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டிஞ்சர் போன்றதொரு மருந்தை போதைக்காக குடித்துள்னர். அதைக் குடித்த சிறிதுநேரத்தில் மூன்று பேருக்கும் உடல் நலம் குன்றி மயக்கம் வந்துள்ளது. இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் மூன்றுபேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து இவர்களுக்கு எப்படி கிடைத்தது என விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், இவர்களது நண்பன் பார்த்தீபன் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே மருந்தில் தண்ணீர் ஊற்றி குடித்ததாகவும் அதனால் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில் இந்த மருந்து வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து குறிப்பிட்ட மருந்தகத்தில் விசாரித்தபோது தங்களிடம் இந்த மருந்து ஸ்டாக் இல்லையென தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு