இணையத்தைக் கலக்கும் கராச்சி விராத் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியைப் போன்றே உருவத்தில் ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.  
கராச்சியின் ஷாஹீத் இ மிலத் எனும் பீட்சா கடையில் கோலியை போன்ற உருவம் கொண்ட நபர் வேலை பார்த்து வருகிறார். அவர் பீட்சா கடையில் வேலை பார்ப்பது போன்ற வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸைக் குவித்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் பரம வைரியாக பாகிஸ்தான் இருந்தாலும், அந்த நாட்டில் விராத் கோலிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. விராத் கோலியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர் குறித்த வீடியோ பதிவு ஃபேஸ்புக்கில் ஜஸ்ட் பாகிஸ்தானி திங்க்ஸ் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இஸ்லாமாபாத்தின் சன்டே பஜார் டீக்கடை இளைஞர் அர்ஷத் கானின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.  


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement