ஊரடங்கு ‘பாஸ் பட்டன்’ தான் ; தீர்வு அல்ல - ராகுல் காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு என்பது கொரோனா வைரஸை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஒன்று தான் என்றும், அதுவே தீர்வல்ல என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “சரியான நிர்வாகம் இல்லை என்றால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாது. மக்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக ஒழித்துவிடக்கூடாது. கொரோனா அதிகம் பரவியுள்ளதாக அறியப்பட்ட இடங்கள் முழுவதிலும் உடனே அனைவருக்கும் பரிசோதனை செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

image


Advertisement

அத்துடன், “கொரோனா வைரஸால் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிறு தொழிலாளர்களுக்கு என்ன தேவை என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஊரடங்கிற்குப் பின்னர் என்ன செய்வது என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். மாநிலங்களுக்கு நிதியை அதிகமாக வழங்க வேண்டும். அப்போது தான் இந்தியா முழுவதும் ஒற்றுமையாக கொரோனாவிற்கு எதிராக போராட முடியும்” என கூறியுள்ளார்.

image

மேலும், “கொரோனா வைரஸிற்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மோடி மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு என்பது தற்காலிகமாக கொரோனாவை நிறுத்தி வைப்பது தானே தவிர தீர்வு அல்ல. நான் அரசை குறைகூறவில்லை. அறிவுரை மட்டுமே வழங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

மலைக்கிராம மக்களுக்கு சேவை செய்த இளம் மருத்துவர்.. டெங்கு காய்ச்சலில் பரிதாப மரணம்

loading...

Advertisement

Advertisement

Advertisement