[X] Close >

‘மக்களுக்கு உதவ போலீஸ் அனுமதி தேவையில்லை.. தகவல் கொடுத்தால் போதும்’: உயர்நீதிமன்றம்

Why-does-police-need-help-to-help-people--Enough-information--HC

 


Advertisement

ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் போதும் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையோ நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க, காங்கிரஸ், மதிமுக, ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் நிவாரண உதவிகளை வழங்க தடை விதித்துள்ளதாக தவறான தகவலை கூறி, அரசு நடவடிக்கைகளுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் திமுக தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசுத்தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


Advertisement

ஆரவாரமின்றி ஆப்பிள் வெளியிட்ட ‘ஐபோன் எஸ்இ 2’ - சிறப்பம்சங்கள், விலை..!

image

இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவு வழங்க செல்பவர்களையும் கைது செய்கின்றனர். சொமோட்டோ, ஸ்வுகி போன்றவை வினியோகிக்கின்றனர் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. அதேபோல், ‘உதவுவதாக கூறி கூட்டம் சேர்கின்றனர். சொமோட்டோ, ஸ்விகி பணியை கூட திமுக புரிந்துகொள்ளவில்லை என தெரிகிறது’என்று அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

குருட்டு தைரியத்தில் வெளியே வராதீர்கள்.. வழக்குப் பதிவுகள் குறித்து எச்சரிக்கும் காவல்துறை

image

இந்நிலையில், ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் போதும் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், ‘உணவு பொருட்கள், மளிகைப் பொருள் வினியோகிக்கும் போது 48 மணி நேரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மூன்று பேர் மட்டும் உடன் செல்ல வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close