ஆரவாரமின்றி ஆப்பிள் வெளியிட்ட ‘ஐபோன் எஸ்இ 2’ - சிறப்பம்சங்கள், விலை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய செல்போனான ஐபோன் எஸ்இ 2 அல்லது ஐபோன் எஸ்இ 2020 மாடலை பிரம்மாண்ட நிகழ்ச்சியின்றி வெளியிட்டிருக்கிறது.


Advertisement

உலக அளவில் பிரபல செல்போன் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஆப்பிள். எனவே இந்நிறுவனம் தங்கள் வெளியீடுகளை பிரம்மாண்டமாகவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளுடனும் வெளியிடும். ஆனால் உலகமே கொரோனா மற்றும் ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தமுறை எந்த ஆரவாரமுமின்றி தங்கள் புதிய ஐபோனை வெளியிட்டிருக்கிறது.

image


Advertisement

ஐபோன் எஸ்இ 2 குறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம், இந்த போன் ஊரடங்கால் பொருளாதார வீழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் விலையில் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிக தொழில்நுட்பங்களை எதிர்பார்ப்பதால், அதற்கு ஏற்றாற்போலவும் இந்த போனை வடிவமைத்திருப்பதாக கூறியுள்ளது. இந்த போனின் விலை ரூ.30,500 என குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள் :

ஐபோன் எஸ்இ 2 செல்போன் 4.7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. இதன் மேற்புறத்திலும், அடிப்புறத்திலும் வலிமையான கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் டிஸ்ப்ளேஇல் ஃபிங்கர் பிரிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்த போன் தண்ணீருக்குள் விழுந்தால் பழுதடையாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் ஆழம் கொண்ட தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை இந்த போன் கிடந்தாலும் எதுவும் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூசிகளுக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது என கூறப்பட்டுள்ளது.

image

இந்த போனின் பின்புறத்தில் 12 எம்பி (மெகா பிக்ஸல்) மெயின் கேமராவும், 1.8 சென்ஸார் லென்சும் எல்இடி ஃப்ளாஷ் லைட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 7 எம்.பி செல்ஃபி கேமராவும், 2.2 சென்ஸாரும் ஃபளாஷ் லைட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. 18 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி இதில் உள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 40 மணி நேரங்கள் ஆடியோக்களை கேட்க முடியும் என்றும் அல்லது 18 மணி நேரம் வீடியோக்கள் பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022 வரை....” - எச்சரிக்கும் புதிய ஆய்வு

மெமரியை பொறுத்தவரை 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று ரகங்களில் வெளியிடப்படுகிறது. அதற்கேற்ப விலையும் ரூ.30,500, ரூ 34,400 மற்றும் ரூ.42,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் சிவப்பு, கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement