ஈரோடு: கொரோனாவால் பாதித்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.


Advertisement

 ஈரோடு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்து. இவர்களில் 4 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒருவர் திருச்சியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பெருந்துறையைச் சேர்ந்த 60 வயது முதியவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 58 நபர்களில் தற்போது 13 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா உறுதியான 45 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குணமடைந்து வீடு திரும்புபவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் மலர் கொத்துகளும் பழங்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்கவும், வெளி நபர்களை சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement