கடலூரில் கோஷ்டி மோதல்: இருவர் வெட்டிக் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 கடலூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

முகக் கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

image


Advertisement

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுகவினர் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து  இவர்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பினர் மீதும் காவல் நிலையத்தில் வழக்குகளும் உள்ளன.

image


Advertisement

 

சென்னையில் எங்கெல்லாம் கொரோனா பாதிப்பு?: பிரத்யேக செயலி வெளியிட்ட மாநகராட்சி

இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் முற்றியதில், திருவதிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement