எம்எல்ஏவுக்கு கொரோனா என வதந்தி பரப்பிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்
கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதையும் மீறி வதந்தி பரப்பி வருவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனிடையே காரைக்காலைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா இருப்பதாக கூறி ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
காரைக்கால் திரவுபதி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் ஒரு ஆட்டோ டிரைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தங்களது தொகுதி எம்.எல்.ஏ -வை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ஐந்து கிலோ அரிசி இலவசமாக கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ஃபேஸ்புக் பதிவில் முக்கிய செய்தி என்று குறிப்பிட்டு எம்.எல்.ஏ -வுக்கு கொரோனா இருப்பதாகவும் அவரை மருத்துவர்கள் தேடி வருவதாகவும் பதிவிட்டு இருக்கிறார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் ஆரோக்கியராஜ் மற்றும் பாஸ்கர் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நகர காவல் துறையினர் ஆட்டோ டிரைவர் ஆரோக்கியராஜை கைது செய்துள்ளனர் .
குவியும் ஆன்லைன் ஆர்டர்கள் - மேலும் 75,000 பேரை பணி அமர்த்தும் அமேசான்
Loading More post
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கொரோனா எதிரொலி: மகாராஷ்டிராவில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!