கொரோனா காலத்தில் பொதுத்தேர்தலை நடத்தும் தென்கொரியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 40க்கும் அதிகமான நாடுகளில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் தென்கொரியா மட்டும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துகிறது. கொரோனா அச்சத்துக்கு மத்தியில் இது எப்படி சாத்தியம் என்பதை பார்க்கலாம்.


Advertisement

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர கூடாது, ஒருவரையொருவர் தொட கூடாது, கூட்டம் கூட கூடாது , தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம், இவை எல்லாம் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூறப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். ஆனால் இவை எல்லாம் இல்லாமல் தேர்தல் எனப்படும் ஜனநாயக திருவிழா சாத்தியமாகுமா? எனவே தான் ,இலங்கை, எத்தியோப்பியா, பிரான்ஸ் உள்ளிட்ட 47 நாடுகள் தேர்தல்களை ஒத்திவைத்துள்ளன. ஆனால் கொரோனா வைரஸால் தென்கொரியா பொதுத்தேர்தலை தடுக்க முடியவில்லை.

image


Advertisement

சில வாரங்களுக்கு முன்னர் இங்கு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என தென்கொரியா மக்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த தென்கொரியா அரசு தேர்தலையும் நடத்துகிறது. இப்படி ஒரு பெருந்தொற்று அச்சுறுத்தலிலும் தேர்தலை நடத்துவது எப்படி என தென்கொரியாவை பார்த்து கற்று கொள்ள வேண்டும். வழக்கமான பரப்புரைகள் இங்கு நடைபெறவில்லை. வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின் போது முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தினர். பரப்புரைக்காக தங்களுடன் 4 பேருக்கு மேல் அழைத்து செல்லவில்லை.

வாக்காளர்களிடம் கைகுலுக்குவது தொட்டு பேசுவது கட்டி பிடிப்பது போன்ற செயல்களை தவிர்த்தனர். தென்கொரியா தேர்தல் ஆணையமும், ஒரே நாளில் வாக்குப்பதிவை நடத்தாமல், முன் கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தது. இதன்படி கடந்த வாரம் முதலே மக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஜனநாயக கடமையைஆற்றி வருகின்றனர். இதனால் தேர்தலன்று வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

image


Advertisement

ஏற்கனவே நாட்டில் 27 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துவிட்டனர். கொரோனா அச்சத்தால் தனிமைபடுத்தப்பட்டவர்களும் வாக்களிக்க சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதார பணியாளர்கள், கொரோனா நோயாளிகளுக்கு என தனி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உடல்வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றியே தேர்தல் நடத்தப்படுகிறது.

புதன்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவின் போதும் இதே முறை பின்பற்றப்படும். பெருந்தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் அந்த தேர்தலே வைரஸ் பரவலுக்கு வித்திட கூடாது என்ற கவனமும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த இரண்டையும் பின்பற்றி தென்கொரியா தேர்தலை நடத்துகிறது. கடந்த 28 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திலும் வெற்றிகரமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, கொரோனா நோயாளிகள் தொலைபேசி வாயிலாக தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement