JUST IN

Advertisement

“வெளிநாட்டில் வாழும் தமிழர்களே கவலைப்படாதீர்கள்..இதுவும் கடந்து போகும்”: ரஜினி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறை கடைபிடிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். கொரோனா வைரஸால் முழு உலகமுமே பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு இந்தியாவும், தமிழகமும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் உங்களை பிரிந்து வாழும் உறவினர்கள், எந்நேரமும் உங்களைப் பற்றியே கவலை கொண்டுள்ளனர்.

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ, அந்த நாட்டின் அரசின் விதிமுறைகளை கடைபிடியுங்கள். அப்படி கடைபிடித்து உங்களை பாதுகாத்து கொள்வதே குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் நீங்கள் தரும் இந்த ஆண்டின் பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்” என்று ரஜினி காந்த் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக காலையிலே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரஜினி காந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” எனத் தெரிவித்து இருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement