திருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா : எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு சுகாதாரத்துறை செயலர் ஃபீலா ராஜேஷ், இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

மாவட்ட வாரியாக பார்க்கும்போது இன்று ஒரே நாளில், சென்னை - 9, கோவை - 7, செங்கல்பட்டு - 2, கரூர் - 15, திருப்பூர் - 18, மதுரை - 14, சிவகங்கை - 4, ராமநாதபுரம் - 3, திருவள்ளூர் - 4, நாகை - 5, தூத்துக்குடி - 2, திருபத்தூர் - 1, விருதுநகர் - 6, திருவாரூர் - 3, வேலூர் - 4, திருவண்ணாமலை - 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 image

கொரோனா பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட வாரியாக சென்னை 205 பேருடன் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் கோவை - 126, திருப்பூர் - 79, ஈரோடு - 64, திண்டுக்கல் - 56, நெல்லை - 56, நாமக்கல் - 45, செங்கல்பட்டு - 46, திருச்சி - 43, தேனி - 40, கரூர் - 41, ராணிப்பேட்டை - 38, மதுரை - 39, திருவள்ளூர் - 33, நாகை - 29, தூத்துக்குடி - 26, விழுப்புரம் - 23, கடலூர் - 19, சேலம் - 18, திருப்பத்தூர் - 17, விருதுநகர் - 17, திருவாரூர் - 16, வேலூர் - 16, கன்னியாகுமரி - 15, திருவண்ணாமலை - 12, தஞ்சாவூர் - 12, சிவகங்கை - 10, நீலகிரி - 9, காஞ்சிபுரம் - 8, தென்காசி - 5, ராமநாதபுரம் - 5, கள்ளக்குறிச்சி - 3, அரியலூர் - 1, பெரம்பலூர் - 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

“தன்னார்வலர்களுக்கு தடையில்லை.. காவல்நிலையத்தில் அனுமதி பெறலாம்” - சென்னை ஆணையர்

loading...

Advertisement

Advertisement

Advertisement