சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனியார் மருத்துவர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயதான மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நெல்லூரில் சிகிச்சை அளித்து வந்தார். இதையடுத்து அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் 10 நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரது மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அத்துடன் மருத்துவரின் டிரைவர் மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் நெல்லூரிலேயே சிகிச்சையில் உள்ளனர்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?