விராட் கோலியை ஏன் வம்பிழுக்கவில்லை ? ஆஸி. கேப்டன் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலி நன்றாக விளையாடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரை வம்புகளில் இழுக்கவில்லை என்று ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் கூறியுள்ளார்.


Advertisement

image

கடந்த வாரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அதில் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து இந்தியக் கேப்டன் விராட் கோலியை வம்பிழுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், விராட் கோலியை பகைத்துக்கொண்டால் பெங்களூர் அணியில் இடம் கிடைக்காது என்பதால் நல்லவிதமாக நடந்துக்கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் கிளார்க்கின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


Advertisement

image

ஆனால், கிளார்க்கின் இந்த சர்ச்சை பேச்சுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெயின் விளக்கமளித்துள்ளார் அதில் " ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் நல்லவிதமாக நடந்துகொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் நான் பார்க்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட்ட அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காகவே உழைத்தார்கள்" என தெரிவித்துள்ளார்.

image


Advertisement

மேலும், கருத்து தெரிவித்துள்ள பெயின் "கோலியிடம் யார் நட்பு பாராட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் முடிவெடுத்தோம். ஏனெனில், அப்படி நடந்தால் அதன்மூலம் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார் கோலி. அந்தத் தொடரில் பரபரப்பான தருணங்கள் பல இருந்தன. நாங்கள் யாரும் எதிலும் பின்வாங்கவில்லை. விராட் கோலிக்குப் பந்துவீசும்போது யாரும் ஐபிஎல் ஒப்பந்தத்தை எண்ணிப் பார்ப்பதில்லை" என தெரிவித்திருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement