JUST IN

Advertisement

ஐரோப்பிய பயணத்தால் வந்த வினை?: சவுதி மன்னர் குடும்பத்துக்கும் கொரோனா தொற்று?  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவிற்கு 95,722 நபர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 1,603,719 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 356,655 நபர்கள் குணமாகியுள்ளனர். கொரோனா தொற்றானது சாமனியர்கள் மட்டுமல்லாது உலக தலைவர்களுக்கும் பரவியது நாம் அறிந்ததே. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அரசர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். இதற்கு அடுத்தப்படியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வரிசையில் தற்போது சவுதி அரேபியே மன்னர் குடும்பமும் இணைந்துள்ளது.


Advertisement

சென்னை: திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது

image


Advertisement


சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ரியாத்தின் ஆளுநரும் இளவரசருமான , பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸிஸுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் 70 வயதை கடந்தவர். குடும்பத்தினருக்கு வைரஸ் பரவியதால் அரசர் சல்மான் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திருச்சியில் ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்... தப்பித்து ஓட்டம் பிடித்த பெண்கள்..!

image


Advertisement


அரசு குடும்பத்தினர் மேலும் பலருக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு வருவதாக சிறப்பு மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.
இளவரசர்கள் பலரும் அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கும் என சொல்லப்படுகிறது. சவுதி அரேபியாவில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement