கொரோனாவில் இருந்து காப்பாற்ற பிஞ்சுக் குழந்தைகளுக்கு  தனி மாஸ்க்!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய மாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியைக் கிளப்பி வருகிறது, இந்த நோய்த் தொற்றுக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்த நோய்க்குத் தொற்றால் 1,523,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்த அளவில் 5865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்று நோய் பெரியவர்கள், முதியவர்கள். குழந்தைகள் என  யாரையும் விட்டு வைக்கவில்லை.  இதனிடையே இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டுள்ளது.
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் குளோஸ் அப்
 
இந்நிலையில்  தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை பிஞ்சு பிள்ளைகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் கூடுதல் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. ஆகவே அந்தக் குழந்தைகளுக்காக ஒரு பிரத்யேகமான முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. 
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குழந்தை மற்றும் குளோஸ் அப்
 
தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகர்ன் மாகாணத்தில் உள்ள பாவ்லோ மருத்துவமனையின் பிரசவம் வார்டில் உள்ள சில தாய்மார்கள் தங்களின் குழந்தைகளைப்  போர்வையால் போர்த்திக் கொண்டு கூடவே குட்டியான முகக்கவசங்களை அணிவித்து உள்ளனர்.   இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது. அந்தப் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாக மாறியுள்ளது.
 
இது குறித்து பவ்லோ மருத்துவமனையின் முகநூல் பக்கத்தில், “எங்கள் மருத்துவமனையில் பிறந்த பிஞ்சு குழந்தைகளுக்குக் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய முகத்தை மறைக்கும் முகக்கவசம்” என்று பதிவிட்டுள்ளது.
 
 
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement