JUST IN

Advertisement

கொரோனா தாக்குதலுக்கு ஆளாகும் மருத்துவர்கள் - கூடுதல் கவனம் எடுக்குமா அரசு?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ,734 ஆக அதிகரித்துள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது - முதல்வர் பழனிசாமி 


Advertisement

image

 நாடு முழுவதும் மருத்துவர்களும், பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் உயிரைக் காக்கும் மருத்துவர்களையும் விட்டுவைக்கவில்லை கொரோனா வைரஸ் என்ற பேரரக்கன். ஆம் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்களுக்கும் செவிலியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image


Advertisement

இதேபோல டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற இருப்பவர் உள்ளிட்ட 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை 21 செவிலியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உச்சகட்டமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தூர் நகரில் மட்டும் கொரோனா நோய்க்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

image

கொரோனா சோதனைக்காக இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் வருகிறது: முதல்வர் 

மேலும் தமிழகத்திலும் சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அரசு சார்பில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முதலில் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்குத் தீவிர சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டும், அவர்கள் பிழைத்தால்தான் மற்றவர்கள் பிழைப்பார்கள். எனவே, கொரோனா தடுப்புக்காக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement