சுற்றுலா விசாவில் மதுரை வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேருக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவி வருவதை தடுக்கும்
விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி மதுரை அண்ணா நகரில் 54 வயதுடையவர் கொரோனா
தொற்றால் பலியானார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்ததும் மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில்
மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுடன் பயணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 8 பேர் மற்றும் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த மதுரை விளாங்குயைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் உட்பட 9 பேருக்கு மதுரை அரசு
ராஜாஜி மருத்தவமனையில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது . இதனைதொடர்ந்து ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு
மையத்தில் வைத்து அவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டனர்.
விற்பனைக்கு தயாராக இருந்த 180லிட்டர் சாராயம்! ஒருவர் கைது!
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !
தற்போது அவர்கள் மீது ஆஸ்டின்பட்டி காவல்துறையினர், சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டது, அரசு உத்தரவை மீறி வெளியே வருதல், தனக்கு நோய் இருப்பது தெரிந்தும்
அதனை பரப்பும் எண்ணத்தில் கூட்டத்தில் பங்கேற்பது( வெளியே வருதல்), தமிழ்நாடு பொது சுகாதார பிரிவு 1939, தேசிய பேரிடர் பிரிவு 2005 என 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 8 பேர் மற்றும் மதுரை விளாச்சேரி சேர்ந்த வழிகாட்டி ஆகிய 9 பேரை கைது செய்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர், திருமங்கலம்
குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரானா சோதனை அறிக்கை மட்டுமே இருந்ததால், அவர்களை மீண்டும்
பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருமங்கலம் டி.எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை
ராஜாஜி மருத்துவமனைக்கு 9 பேரையும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!