விற்பனைக்கு தயாராக இருந்த 180லிட்டர் சாராயம்! ஒருவர் கைது!

57-yr-old-illegally-stocks-180-litres-of-liquor-to-sell-amid-lockdown--booked

மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில் விற்பனை செய்தவற்காக வைக்கப்பட்டிருந்த 180லிட்டர் சாராயத்தை புனே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையான பலர் மதுக்கடைகளை சூறையாடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

image


Advertisement

இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் விற்பனை செய்தவற்காக வைக்கப்பட்டிருந்த 180லிட்டர் சாராயத்தை புனே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 57 வயதான ஷோபன் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மாநிலங்களின் பல இடங்களில் விற்பனை செய்வதற்காக இந்த சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு முதன்முறையாக மருத்துவர் உயிரிழப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement