JUST IN

Advertisement

இந்தியாவில் கொரோனாவுக்கு முதன்முறையாக மருத்துவர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோய் பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது. 166 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 473 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம், இந்தூர் நகரில் மட்டும் கொரோனா நோய்க்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement