JUST IN

Advertisement

அழையா விருந்தாளியாக வந்து ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வீட்டிற்குள் இருந்த ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பை வனத்துறையினர் சாதுர்யமாக மீட்டனர்


Advertisement

சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்லாத நிலையில் அவரது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில், அவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாம்பை வீட்டில் உள்ளவர்கள் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அங்கும் இங்கும் ஓடிய பாம்பு, வீட்டில் இருந்த ஃபிரிட்ஜிக்குள் புகுந்தது.

image

இதனையடுத்து செய்வதறியாத மணிகண்டன், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பை சாதுர்யமாக பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பினை ஒரு பக்கெட்டுக்குள் போட்டு அடைத்து, பாதுகாப்பாக வெளியே கொண்டு சென்றனர். அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் வந்த நல்ல பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement