JUST IN

Advertisement

ஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


Advertisement

மார்ச் 30ஆம் தேதி 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 31 அன்று ஒரே நாளில் 57 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதன்பின் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து கொண்டே வந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

image


Advertisement

ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி ஒரே நாளில் 102 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி 74 பேரும், ஏப்ரல் 5ஆம் தேதி 86 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைந்தது.

image

ஏப்ரல் 7ஆம் தேதி 69 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 18ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மார்ச் 31ஆம் தேதி தமிழகத்தில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 738ஆக உயர்ந்துள்ளது


Advertisement

மருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி !

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement