அதிபர் தேர்தல்: ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார் சாண்டெர்ஸ்..!

Bernie-Sanders-drops-out-of-the-2020-US-President-race

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகினார்.


Advertisement

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இது திட்டமிட்டபடி நடைபெறுமா ? என தெரியவில்லை. அத்துடன் குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பிலிருந்து யார் போட்டியிடுவார் ? என்பதிலும் தெளிவற்ற நிலை இருந்தது.

image


Advertisement

குறிப்பாக ஜனநாயகக் கட்சி சார்பில் பெர்னி சாண்டர்ஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே ட்ரம்புக்கு எதிராக களம் காண முயற்சித்தார். ஆனால் அப்போது தனது கட்சிக்குள் நடத்தப்பட்ட வேட்பாளர் தேர்வில் ஹிலாரி கிளிண்டனிடம் தோற்றார். இந்நிலையில், இந்த முறை கண்டிப்பாக வேட்பாளராக இடம்பிடித்து விடலாம் என வேலைகள் செய்து வந்தார்.

"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை" தீபக் சாஹர் !

ஆனால், இந்த முறையும் கட்சிக்குள் பெரிதளவில் இவருக்கு ஆதரவு அலை இல்லாததால் வேட்பாளர் போட்டியிலிருந்தே விலகியுள்ளார். இவர் விலகியதால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடேன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement