கொரோனா வைரஸ் வடிவில் கார்..! - அசத்திய ஹைதராபாத் நிபுணர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கே.சுதாகர் என்பவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "கொரோனா வைரஸ் கார்" ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.


Advertisement

image

“உயிர் போனால் மீட்க முடியுமா? ஊரடங்கை நீட்டியுங்கள்” - தெலங்கானா முதல்வர் கோரிக்கை 


Advertisement

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 402லிருந்து 411 ஆக உயர்ந்துள்ளது.

image

தெலங்கானா மாநிலத்தில் இதுவரை 63 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கையும் வைத்துள்ளார்.


Advertisement

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை 

இந்நிலையில், ஹைதராபாத் நகரில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கே.சுதாகர் என்பவர் கொரோனா வைரஸ் வடிவில் காரை வடிவமைத்துள்ளார். இந்தக் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கார் மூலம் நகர்வலம் வரும் சுதாகர் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தி வருகிறார்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement