[X] Close >

"என் வழி ஜியோ வழி...." - ஐடியா அதிரடி

Jio-effect--Idea-Cellular-offers-70-GB-data-with-unlimited-calling-at-Rs-396

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலையன்ஸை தொடர்ந்து ஐடியா தொலைதொடர்பு நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. 


Advertisement

2 மாதங்களுக்கு ஒருமுறை புதிய சலுகைகளை அளித்து ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ, வோடோபோன் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது ஐடியா நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.369க்கு 70ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 70 நாட்கள் இந்த சலுகையை பயன்படுத்த முடியும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் தினமும் ஐடியா நம்பர்களுக்கு 300 நிமிடங்கள் இலவசமாக பேசும் வசதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ஜானை முன்னிட்டு ரூ.786 ரீச்சார்ஜ் செய்தால் 25ஜிபி டேட்டாவும், அன்லிமிட்டட் கால் வசதியும் கிடைக்கும் என ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் நம்பர்களிலிருந்து இந்த சலுகைகள் செல்லுமா என்று சோதனை செய்து பார்க்க வேண்டும் எனவும் ஐடியா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டுகளின் அறிமுகத்திற்கு பின் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏர்டெல், ஏர்செல், வோடோபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close