“வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே மளிகை கடைகள்..” - வேலூர் ஆட்சியர் அதிரடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூரில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அதுவும் 4 மணி நேரங்களுக்கு மளிகைக் கடைகள் திறந்திருக்கும் என ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூரில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் எங்கும் பயணிக்காத 45 வயது நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார். இதன் எதிரொலியாக வேலூரில் ஊரடங்கு உத்தரவுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

image


Advertisement

அதன்படி, மளிகை கடைகள் அனைத்தும் வாரத்தின் திங்கள், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் மட்டுமே திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இறைச்சிக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்க தடை விதித்துள்ளார். அத்தியாவசிய தேவையான பால் கடைகளை மட்டும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.

image

இதுதவிர காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவற்றை தினந்தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க உத்தரவிட்டுள்ளார். மருந்துகடைகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தள்ளுவண்டிகள், சாலையோர கடைகள், பெட்டிக்கடைகள் என எதுவும் திறக்கக்கூடாது என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஊரடங்கிற்கு பிறகு விமானத்தில் செல்லலாம் என நினைப்பவரா நீங்கள்..? கெடுபிடிக்கு வாய்ப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement