JUST IN

Advertisement

‘ஊரடங்கை நீட்டிக்கலாம்.. எம்.எல்.ஏக்கள் சம்பளத்தில் 30% கட்’: உத்தரகாண்ட் அமைச்சரவை அதிரடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கை நீட்டிக்க உத்தரகாண்ட் அமைச்சரவை ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் மதன் கௌஷிக் தெரிவித்துள்ளார்


Advertisement

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வந்ததை அடுத்து மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும், உடனடியாக திரும்பப் பெற வேண்டாம் என்று பல்வேறு மாநில அரசுகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அமைச்சரவையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில அமைச்சர் மதன் கௌஷிக் கூறுகையில், “உத்தரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரையை அனுப்பி உள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “அடுத்த உத்தரவு வரும் வரை எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தில் 30 சதவிதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் குறைக்கப்படும்” என்றார்.


Advertisement

image

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்களுடன் கொரோனா பாதுகாப்பு குறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஊரடங்கு உடனடியாக திரும்பப் பெறப்படாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

"அனுமனை போல இந்தியா எங்களை காப்பாற்ற வேண்டும்" பிரேசில் அதிபர் கோரிக்கை !

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement