வாட்ஸ்அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளை நம்புவதற்கும் வழிவகுக்கிறது. வாட்ஸ்அப் வதந்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும்படி தக்க நடவடிக்கைகளை எடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தது.
தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் - ரஷ்யா
இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு தகவல்களை சுட்டிக்காட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டது. எனினும் இது மத்தியரசிற்கு திருப்தி அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேம்படுத்தும் பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வந்தது.
அதன்படி, ஒரு தகவலை 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு செய்ய முடியாத வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போதைய கொரோனா காலத்தில் நிறைய சமூக வலைத்தளங்கள் மூலம் போலி தகவல்களும் பரவி வருகிறது. அதனால், வாட்ஸ்அப்பில் அதிகமுறை ஃபார்வேர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் ஒருவருக்கு மட்டுமே அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?