பாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது

பாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது
பாகிஸ்தானில்  பாதுகாப்பு உபகரணங்கள்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கைது

பாகிஸ்தானில் மருத்துவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையானது 3,277 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கையானது 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த எண்ணிகையில் மருத்துவ ஊழியர்களும் அடங்குவர். பாகிஸ்தான் அரசு, மருத்துவர்களுக்கு முறையான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காதாதே அவர்களும் பாதிப்புக்கு உள்ளாவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து அரசை கண்டித்து தென்மெற்கு பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த 100 மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் காவலர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதனால் ஒரு கட்டத்தில் அவர்களை கலைக்க முடிவெடுத்த போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 50 மருத்துவர்களும் கைது  செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேர காவலில் இருந்த மருத்துவர்களை, அரசின் உத்தரவுக்கு பிறகு காவல்துறையினர் விடுவித்தனர்.

இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறும் போது “ நாங்கள் கடந்த சில வாரங்களாகவே எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசோ அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார்.

அரசு சார்பில் ஒருவர் கூறும் போது “ அவர்களுக்கு விரைவில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆனால் அதற்குள் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டனர்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com