கெமிஸ்ட்ரி விடைத்தாளில் பாலியல் வர்ணனை: மாணவன் மீது வழக்கு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கெமிஸ்டிரி விடைத்தாளில் பாலியல் விஷயங்களை எழுதிய மாணவன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் போர்சாத்தை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் டூ மாணவர். இவரது பிளஸ் டூ விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தினர். அப்போது கெமிஸ்டிரி விடைத்தாளை திருத்திய டீச்சர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் ஒரு பதிலில் நடிகை ஒருவர் மீதான தனது பாலியல் ஆசைகளையும் தனது அண்ணி மீதான பாலியல் ஆசைகளையும் விரிவாக எழுதியிருந்தார் குமார். ஷாக் ஆன டீச்சர் இதுபற்றி தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
குஜராத் மாநில பள்ளிக்கல்வித் துறை சேர்மன் கூறும்போது, ‘குமார், அடிக்கடி பாலியல் இணையதளங்களை பார்த்து இப்படியாகிவிட்டான். விடைத்தாளில் இவ்வாறு எழுதியது பற்றி தேர்வு சீரமைப்பு கமிட்டியிடம் விளக்கமளிக்க குமாரை அழைத்திருந்தோம். ஆனால் வரவில்லை. இந்த விடைத்தாளை அவன் பெற்றோரிடம் காண்பிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement