கொரோனா பரிசோதனை முடிவுக்கு சில நிமிடங்கள் போதும்; இதுதான் ஆன்டிபாடி சோதனை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கு ஆன்டிபாடி எனும் எதிர்உயிரி சோதனைகள் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் பி.சி.ஆர். சோதனைக்கும், ஆன்டிபாடி சோதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?


Advertisement

image

கொரோனா வைரஸால் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது பி.சி.ஆர், ஆன்டிபாடி சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சளி மற்றும் ‌ரத்த மாதிரிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பி.சி.ஆர் முறையில் ஆய்வகத்தில் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷனுக்கு உட்படுத்தப்படும். ஆன்டிபாடி பரிசோதனை கருவியில் எளிதில் ஆய்வு செய்யலாம். சேகரிக்கப்பட்ட சளியில் பி.சி.ஆர்.முறையில் வைரஸின் ஆர்.என்.ஏ.கண்டறியப்படும்.


Advertisement

image

ஆன்டிபாடி சோதனையில் வைரஸுக்கு எதிராக போராடும் வகையில் நமது உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ரத்தம் மூலம் கண்டறியப்படும். பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கிடைக்க ஒரு சில நாட்களாகும். அதேசமயம் ஆன்டிபாடி ஆய்வு முடிவுகள் ஒருசில நிமிடங்களிலேயே கிடைத்து விடும். இதன் காரணமாகவே கொரோனா உறுதியானவர் வசிக்கும் பகுதியை சுற்றி உள்ளவர்களுக்கு ஆன்டிபாடி சோதனை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாதம் மாதம் சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தை பிடித்துக்கொள்ளுங்கள் - தமிழிசை சவுந்தரராஜன்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement