‘முறையாக திட்டமிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு’: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

Kamal-Haasan-pens-open-letter-to-PM-Narendra-Modi-criticising-implementation-of-the-lockdown

முறையாக திட்டமிடப்படாமல் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement

டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள கடித நகலில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் செய்யப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். சேமித்து வைத்த பணத்தையும் வாழ்வாதாரத்தையும் அப்போது தொலைத்த ஏழை மக்கள், தற்போது ஊரடங்கு உத்தரவால் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற உளவியல் ரீதியான சிகிச்சைகள் பால்கனியில் இருக்கும் மக்களுக்கே தவிர, கூரைக் கூட இல்லாத மக்கள் என்ன செய்வார்கள்? என்று அந்த கடிதத்தில் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது பால்கனிகள் எண்ணெய் விளக்குகளால் ஒளிரும் அதேநேரத்தில், அடுத்த வேளை ரொட்டிக்கு எண்ணெய் இல்லாமல் ஏழை மக்கள் போராடுவதாகவும் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

பால்கனியில் இருக்கும் மக்களுக்காக பால்கனி அரசாக மட்டுமே தாங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், இந்த முறை தங்களது பார்வை தோல்வியடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி பேசியது குறித்தும் தன்னுடைய விமர்சனங்களை கமல்ஹாசன் வெளிப்படையாக வைத்திருந்தார். அது தொடர்பாக கமல் தன்னுடைய ட்விட்டரில், “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.


வேண்டாம் சாதி, மத வேறுபாடுகள்.. கொரோனா போரில் தேவை ஒற்றுமை மட்டுமே: ராகுல்


 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement