#TopNews ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள் முதல் அதிகரித்த கொரோனா பாதிப்பு வரை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள். அகல்விளக்கு ஏற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் ஒருமைப்பாட்டை பறைசாற்றினர்.


Advertisement

ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக ஆள் உயர குத்துவிளக்கை ஏற்றினார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் ஒளியேற்றும் நிகழ்வில் பங்கேற்பு.

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 571 ஆக அதிகரிப்பு. 


Advertisement

சென்னையில் தீ விபத்து..! பட்டாசு வெடித்ததால் வந்த வினை?

image

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு. அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்.


Advertisement

ஈரோட்டில் கொரோனா அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர். நோய் தொற்று வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை.

image

 

 தீப ஒளியில் மிளிர்ந்த தேசிய தலைவர்கள்...!

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரிப்பு. சிகிச்சைக்குப் பின் 274 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை தகவல்.

உலக அளவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு. அமெரிக்காவில் உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்குவதால் மக்கள் பேரதிர்ச்சி.

கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி. உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸை வீழ்த்தலாம் என ராணி எலிசபெத் அழைப்பு.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியைத் தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜெர்மனி. கார் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகள் முடங்குவதால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement