JUST IN

Advertisement

சென்னையில் தீ விபத்து..! பட்டாசு வெடித்ததால் வந்த வினை?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு அருகில் அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.


Advertisement

கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும், சிலர் செல்போன்களில் டார்ச் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சில இடங்களில் பட்டாசுகளையும் வெடித்தனர்.

image


Advertisement

இந்நிலையில், சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கான இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதில், குப்பைகள், செடி, மரங்கள் என பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், சுனாமி குடியிருப்பு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

image

அதேபோல, எண்ணூர் விரைவுச்சாலையிலும் புகை மண்டலமாகியது. இது குறித்து, எண்ணூர் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முற்பட்டபோது, காற்றின் வேகம் அதிகரித்ததால், திருவொற்றியூரில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. விளக்கு ஏற்ற சொன்னதில், ராக்கெட் வகையான பட்டாசு வெடித்ததால் அது காலி மைதானத்தில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement