JUST IN

Advertisement

நாங்க போடுறதுதான் மேக்கப் - சூரிக்கு மேக்கப் போட்ட அவரது குழந்தைகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.


Advertisement

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். பரபரப்பான ஓடிக்கொண்டிருந்த பலரும் வீட்டுக்குள் தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து வருகின்றனர், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஓய்வு நேரம் எப்படியெல்லாம் போகிறது என வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

image


Advertisement

சமையல், தோட்ட வேலைகள், உடற்பயிற்சி, குழந்தைகளுடன் விளையாடுவது என ஒவ்வொருவரும் தங்களது நேரத்தை செலவழித்து
வருகின்றனர். நடிகர் சூரி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு - நடிகை மீனா

image


Advertisement

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது, திருமண புகைப்படங்களைப் பார்த்து நினைவுகளை பகிர்ந்து கொள்வது என சூரி தனது நேரத்தை செலவழித்து வருகிறார். குறிப்பாக சூரிக்கு அவரது குழந்தைகள் மேக்கப் போடும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement