நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ''144 தடை உத்தரவை மதிக்காமல் பலர் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அரசு உத்தரவை கடைபிடிக்காத காரணத்தினாலேயே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளன. நேரம் போகவில்லை என்று சொல்லாதீர்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
பிடித்த வேலைகளை செய்யுங்கள். வீட்டிற்கு உள்ளேயே அமர்ந்துகொண்டு உலகத்தை காக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே வீட்டுக்குள்ளேயே இருப்போம். ஆரோக்கியமாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையூறு : தெலங்கானாவில் கவுன்சிலர் கைது
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்