கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி கசாயத்துடன் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கணவரிடமிருந்து மனைவியே 100 சவரன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே பெரியசெல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் சவேரியார் பிச்சை. வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர், மனைவி ஜான்சிராணியுடன் தனியே வசித்து வந்தார். வின்சென்ட், வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல், கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பணத்தேவையை பூர்த்தி செய்ய வீட்டிலிருக்கும் நகைகளையே திருட அவரது மனைவி ஜான்சிராணி முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் கணவரை எப்படி ஏமாற்றலாம் என யோசித்தபோதுதான், ஜான்சி ராணியின் கண் எதிரே தோன்றியது, கொரோனா. அதற்காக கொரோனா தடுப்பு மருந்து எனக்கூறி தூக்க மாத்திரை கலந்த கசாயத்தை கணவர் வின்சென்ட்க்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வின்சென்ட் மயங்கி ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்ல, அந்த தருணத்தைப் பயன்படுத்தி 100 சவரன் நகைகளை திருடி, அதனை வீட்டின் அருகேயே ஜான்சிராணி புதைத்துள்ளார்
காவல்துறையினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கொள்ளை நடந்த வீடு போன்று பொருட்களை எல்லாம் கலைத்தும் போட்டுள்ளார், அந்தப்பெண். வின்சென்ட் கண் விழித்துப் பார்த்தபோது நகைகள் களவு போனது போல நாடகமாடி, அவரையும் நம்பவைத்ததுடன் தாளமுத்து நகர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
பின்னர் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு, ஒரு கட்டத்தில் ஜான்சிராணி மீதே சந்தேகம் எழ, அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். விசாரணையில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார் ஜான்சிராணி. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..!
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு