JUST IN

Advertisement

இந்தியாவில் கொரோனா - அதிகரிக்கும் பாதிப்பு; தற்போதைய நிலை என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


Advertisement

image

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் அகர்வால், தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், அறிகுறி உள்ளோருக்கு அதிவிரைவாக சோதனை நடத்தி முடிவுகளை அறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொரோனா பரிசோதனைகளுக்காக 130 அரசு ஆய்வகங்கள் உட்பட நாடெங்கும் மொத்தம் 182 ஆய்வகங்கள் இயங்கி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பெண்களை விட அதிகமாக உயிரிழக்கும் ஆண்கள்? ஆய்வுகள் சொல்வது என்ன..?


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement