ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை தண்டியுங்கள் என்று பேசிய டி.எஸ்.பியின் ஆடியோ வெளியானதால் மக்கள் தற்போது வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலை தடுக்க 144 உத்தரவு பிறப்பித்த சில நாள்கள் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடிக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் காவல்துறையினர் வேண்டுகோளை மதிக்கமால் கிராமபுறங்களில் சிலர் மீன் பிடித்து கூட்டாஞ்சோறு சமைப்பது, கொரோனாவை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கொரோனா யுத்தம் - 40 விளையாட்டு பிரபலங்களோடு மோடி கலந்துரையாடல் !
இதனையடுத்து அவர்களை எச்சரிக்கும் வகையில், காவல் துறையினர் தோப்பு கரணம் போட வைத்தனர். இருப்பினும் அவர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால் கோபமைடந்த கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் போலீசாருக்கான வாட்ஸ் ஆப் குழுவில் இவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதை ஆடியோக பேசி அனுப்பியிருக்கிறார்.
அந்த ஆடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசுகையில் “ஊரடங்கு உத்திரவை பின்பற்ற சொல்லி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் வைத்தோம். ஆனால் மக்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனால் உயர் அதிகாரிகள் விமர்சனத்திற்கு நாம் உள்ளாக வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்.
ஊரடங்கால் முடங்கிய கிராமம்.. தாங்களாகவே முடிவெட்டிக்கொள்ளும் இளைஞர்கள்..!
ஆகவே இனி மதியம் 2.30க்கு மேல் மக்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது ஈவு இரக்கம் காட்டவேண்டாம். அவர்களது வாகனங்களை மடக்கி பிடியுங்கள். அதே நேரத்தில் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பார்த்து கையாளுங்கள். மற்ற நபர்களை தண்டியுங்கள்” என்று பேசியிருக்கிறார். இதனையடுத்து இந்த ஆடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதனால் கோவில் பட்டியில் மக்கள் வெளியே வராமால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்