கடன் தவணைகளைச் செலுத்த 3 மாத அவகாசம் அளிக்க ரிசர்வ் வங்கி அளித்த அனுமதியால் வங்கிகளுக்கே லாபம் அதிகம் என நிதிச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவலைத் தடுக்க தொழிற்சாலைகள், அலுவலகங்களை ஏப்ரல் 14 வரை மூட உத்தரவிடப்பட்டதால், மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். இதனையடுத்து வேலை பாதிப்பால் வருவாய் இழப்பு ஏற்படுவதைக் கருதி, கடன்களுக்கான மாதத் தவணைகளை வங்கிகள் 3 மாதங்கள் வரை ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி அண்மையில் அனுமதி அளித்தது. அதையடுத்து, வங்கிகளும் அந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தெரிவித்து வருகின்றன.
நெருக்கமாக நின்று பேசினால் கொரோனா பரவ வாய்ப்பு - சொல்கிறது அமெரிக்க ஆய்வு
கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு பணிக்கு வராத 54 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்
ஆனால், நிதி நெருக்கடியில் இருப்போர் தவிர்த்து, வழக்கமான வருமானம் கிடைத்தவர்கள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தாமல் இருப்பதுதான் வாடிக்கையாளர்களுக்கு நல்லது என்று நிதிச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, இந்த தவணை ஒத்திவைப்பால், மூன்று மாதங்களுக்கான கடனுக்கான வட்டி அசலுடன் இணைக்கப்பட்டு விடும். மேலும் அசுலுடன் சேர்க்கப்பட்ட இந்த தொகைக்கும் தனிவட்டி வசூலிக்கப்படும். இதனால், இஎம்ஐ எனப்படும் மாதத் தவணையின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
மேலும், வழக்கமான தவணை செலுத்தப்பட்டால், அசலும் ஓரளவு குறைந்து அதற்கான வட்டி அடுத்தடுத்த மாதங்களில் குறைய வாய்ப்புண்டு. ஆனால், 3 மாதங்களுக்கு தவணை செலுத்தாததால், அசல் மீது மாதத்துக்கு ஒரே அளவான வட்டி சேர்க்கப்பட்டு, அடுத்தடுத்த தவணைகளை அதிகரி்த்தோ அல்லது தவணை செலுத்தும் காலத்தை நீட்டித்தோ வங்கிகள் வசூலிக்க உள்ளன. இதனால், 3 தவணைகளை ஒத்திவைப்பவர்களுக்கு கூடுதலாக 5 தவணைகள் கூட செலுத்த நேரிடும் என்றும், கூடுதல் வட்டி செலுத்துவார்கள் என்றும் நிதிச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால், வருவாயின்றி தவிப்போர் நெருக்கடியில் இருந்து மீளலாம் என்றாலும், அவர்களால் வங்கிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதுதே உண்மை எனவே, தவணையை செலுத்தும் அளவுக்கு வருவாய் இருப்பவர்கள் ஒத்திவைப்பு சலுகையை ஏற்காமல், மாதத் தவணையை தொடர்ந்து செலுத்துவதே லாபகரமானது என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை