JUST IN

Advertisement

மும்பை நகரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் - தமிழகம் அழைத்து வர கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மும்பை சந்தோஷ் நகரில் சிக்கி தவித்துவருகின்றனர்.


Advertisement

image

 கொரோனா எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. முன்பு அத்தியாவசிய தேவைகளை வாங்கிகொள்ள காலை முதல் மாலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நேரமும் மதியம் 2.30 வரையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஏழை எளிய மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பகுதிகளுக்கு, தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபாதையாகவே செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது.


Advertisement

image

கொரோனா வைரஸ் நோயாளி வருகையால் அலார்ட் : தனிமைப்படுத்தப்பட்ட வங்கி, ஏடிஎம்..!


அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், மும்பையிலுள்ள சந்தோஷ் நகரில் கூடாரங்கள் அமைத்து கேபிள் புதைக்கும் பணி செய்துவந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது அவர்கள் உணவுக்கே வழியில்லாமால் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த விஷயத்தில், தமிழக அரசு தலையிட்டு தங்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement