சாம்பியன்ஸ் கோப்பை போட்டி: 23.3 ஓவர்கள் மெய்டனாக வீசிய இந்திய அணி

Champions-Trophy--When-India--bowled-23-3-maiden-overs--against-South-Africa

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி மொத்தம் வீசிய 44.3 ஓவர்களில், 23.3 ஓவர்களை டாட் பந்தாக வீசியது. 


Advertisement

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் ரன் குவிக்க தடுமாறினர். குறிப்பாக புவனேஷ்வர் குமார் - பும்ரா வீசிய முதல் 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணியால் 35 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள், தென்னாப்பிரிக்க அணியை 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். 29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, கடைசி 8 விக்கெட்டுகளை 51 ரன்களுக்கு இழந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் வீரர்கள் வீசிய 141 பந்துகளில் தென்னாப்பிரிக்க அணியால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. இது 23.3 ஓவர்களாகும். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 32 டாட் பந்துகளையும், ஹர்திக் பாண்ட்யா 29 டாட் பந்துகளையும் வீசினர். அதேபோல ஜடேஜாவின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்தது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement