காட்டை கிழிக்கும் உறுமல் ஒலி: மெய் சிலிர்க்க வைக்கும் புலிகளின் சண்டை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புலிகள் சண்டை போடும் வீடியோ ஒன்றை வனத்துறை அதிகாரி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையவாசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது


Advertisement

புலிகள் பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு தொடங்கிய திட்டம் தொடங்கி இன்றோடு 47வருடம் ஆகிறது. அதனை குறிப்பிட்டு வனத்துறை
அதிகாரி பர்வீன் கஷ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் புலிகள் சண்டையிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு புலிகள்
ஆக்ரோஷமாக சண்டையிடுகின்றன.

image


Advertisement

சண்டையிடும் அவை எழுப்பும் உறுமல் ஒலி காட்டையே கிழிக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ தொடர்பாக குறிப்பிட்டுள்ள வனத்துறை அதிகாரி, வளர்ந்த இரு புலிகள் சண்டையிடுகின்றன. ஹெட்போனில் பாருங்கள். ஆக்ரோஷமாக அவை எழுப்பும் ஒலி காட்டில் எதிரொலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து புலி குறித்து சிலாகித்து வருகின்றனர்.


Advertisement

 கிணற்றில் விழுந்து தத்தளித்த சிறுத்தை - போராடி மீட்ட காவல்துறையினர்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement