வாகன உலகம், எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் எரிபொருள் சவால்களுக்கு ஏற்றபடி, பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.
சூப்பர் சார்ஜிடு ஆர்5, கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் கடந்த ஆண்டு, பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதை பின்பற்றி, இந்த ஆண்டில் பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது. இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் மோட்டார்ராட் கான்செப்டில் அது உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது.
இதில் சிராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது. தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும். அட்டகாசமான தோற்றம், தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள பி.எம்.டபுள்யூ மோட்டார் ரெட் கான்செப்ட் ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!
ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது காவல்துறை
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’