[X] Close

டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி நிதி ஒதுக்கீடு

Subscribe
Tamilnadu-cm-edappadi-palanisamy-release-fund-for-farmers

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 56.92 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


Advertisement

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜுன் மாதம் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் பருவ மழை பொய்த்துபோனதால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 56.92 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும் எனவும் நெல் பயிருக்கு மாற்றாக 1.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடி நடவடிக்கை, பயிர் மற்றும் நெல் சாகுடி விவசாயிகளுக்கு உரங்கள் 100 சதவீதம் மானியத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்ய ரூ.4000 வழங்கப்படும். ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close