’ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘96’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குநர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குநர் லஷ்மண், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர். காளி வெங்கட், வினோதினி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
Loading More post
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!