[X] Close >

கருப்பு ராஜாவுக்காக லண்டன் சென்ற பிரபுதேவா

prabhu-deva-moving-to-london

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா தமிழில் இயக்கும் படம், ‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’. விஷால், கார்த்தி ஹீரோக்கள். சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்யா, கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். சமீபத்தில் மறைந்த இயக்குனர் சுபாஷின் கதையான இதற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். தான் இசை அமைக்கும் படங்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று கம்போசிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அதன்படி இந்தப் படத்தின் கம்போசிங் லண்டனில் நடக்கிறது. இதற்காக பிரபுதேவாவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் நேற்று லண்டன் சென்றுள்ளார்.


Advertisement

தற்போது ’யங் மங் சங்’ படத்தில் நடிக்கும் பிரபுதேவா, அடுத்து குலேபகவாலி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில், கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்குகிறார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close