திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை துளையிட்டு ரூ.47,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், பின்புற சுவரை துளையிட்டு ரூ.47 ஆயிரம் மதிப்பிலான 298 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த டாஸ்மாக் கடை மேலாளர் முருகானந்தம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மடப்புரம் பிள்ளையார்கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த அஜித்குமார் (25) , அய்யர்பாலு (எ) முருகேசன் (19) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 28-ந்தேதி மடப்புரம் பகுதி டாஸ்மாக் கடையின் பின்புறம் துளையிட்டு மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், மதுபாட்டில் விற்று வைத்திருந்த ரூ.11,500 மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடைய செல்வம் என்பவரை தேடி வருகின்றனர்.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!