புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 1500 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மீதமுள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து அடையாளம் கண்டறியும் பணி தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?