JUST IN

Advertisement

கொரோனா பாதித்த இருவர் குணமடைந்தனர் - அமைச்சர் விஜய பாஸ்கர் ட்வீட் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
கொரோனா பாதித்த இருவர் குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 
 
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உலகெங்கும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்துப் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்குக் கால நிர்ணயம் வழங்கப்பட்டுள்ளது.
 
image
 
இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகத்தில் கொரோனா பாதித்த இருவர் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக  அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவர் கொரோனா நோய் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் போரூரில் வசித்து வருபவர்கள்.  கொரோனா நோய்ப் பாதிப்பிலிருந்த இவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அளிக்கப்பட்ட சிகிச்சை அவர்களுக்குப்  பலனளித்ததால் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 
 
ஆனால் அவர்கள் இன்னும் 14 நாட்களுக்கு அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட உள்ளனர். இவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரைப் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   
 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement